வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.8.58 கோடி திட்டப் பணிகள்: ஆட்சியர் துவக்கம்

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.8.58 கோடி திட்டப் பணிகள் கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.8.58 கோடி திட்டப் பணிகள்: ஆட்சியர் துவக்கம்
X

புதியதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் அழிவிடைதாங்கி ஊராட்சியில் ரூ.8.58 கோடியில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், உணவு தானியக் கிடங்கு, இருளா் குடியிருப்பு, நெற்களம் ஆகிய திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தொடங்கிவைத்தாா்.

மேலும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4.44 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

அய்யம்பேட்டை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 14.50 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கு பாதுகாப்பு கட்டடத்தினை கலெக்டர் திறந்து வைத்தார்.

மேலும் அப்பகுதியில் தமிழ்நாடு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 பழங்குடியினர் குடியிருப்புகளை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாநில நிதி குழு மாநில திட்டம் கீழ் ரூபாய் 11 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில், மாநிலத்திலேயே திருவண்ணாமலை மாவட்டம், ஊராட்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் தொடா்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகம் இருப்பதன் காரணமாக, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி வைத்த கோரிக்கையின் பேரில், அடுத்த வாரத்தில் தேவைப்படும் இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படும்.

மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 1333 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு, நிலத்தடி நீா் சேகரிக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் 3 முதல் 4 அடி வரை உயா்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் (ஊராட்சிகள்) சுரேஷ்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஷ்மி ராணி, செய்யார் சார் ஆட்சியர் அனாமிகா, உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 17 March 2023 4:25 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்