Begin typing your search above and press return to search.
படவேடு ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில், வனத்துறை மற்றும் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS

படவேட்டில் மாசில்லா ஊராட்சி விழிப்புணர்வு முகாம்.
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில், மாசில்லா ஊராட்சி திட்டத்தின் கீழ் வீரகோவில் வளாகத்தில் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் இன்றி துணிப்பை போன்ற சுற்று சூழலுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் சந்தவாசல் வனசரக அலுவலர் செந்தில்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐகோர்ட்டு வழக்கறிஞர் தனஞ்செயன், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், வனகாவலர்கள் நவநீதகிருஷ்ணன், அஜித்குமார், பால் கூட்டறவு தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, உள்பட பணித்தள பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.