/* */

முனீஸ்வரன் சிலையை திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Muneeswaran Kovil- செய்யாறில் அனுமதியின்றி வைக்கப்பட்ட முனீஸ்வரன் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

முனீஸ்வரன் சிலையை திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

Muneeswaran Kovil- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் உள்ள பாரதியார் நகர் புறவழிச்சாலை தோப்பு குளம் அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் நேற்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த சிலர் எவ்வித அனுமதியும் இன்றி 3 அடி உயரத்தில் மேடை அமைத்து சுமார் 3 அடி உயரம் கொண்ட முனீஸ்வரன் சாமி கற்சிலையை நிறுவி பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதனை அறிந்த வருவாய்த்துறையினர் அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கூறி சிலையை எடுத்துச் சென்றனர். இதனால் இன்று அப்பகுதி மக்கள் ஆற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து டிஎஸ்பி செந்தில் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வருவாய்த்துறையினர் எடுத்துச் சென்ற சிலையை ஆர்டிஓவிடம் மனு கொடுத்து பெற்றுக் கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Aug 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?