திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
X

மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் வாக்காளர் தின உறுதி மொழியினை ஏற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளூர், செய்யாறு, எஸ்பி அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

செங்கம்

செங்கத்தில் வருவாய்த் துறை சாா்பில் வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வட்டாட்சியா் முனுசாமி பேரணியைத் தொடக்கிவைத்தாா். செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் துரைராஜ், ஜெயபாரதி, வருவாய் அலுவலா் ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூா்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணியை தலைமை ஆசிரியா் பழநி தொடக்கிவைத்தாா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தின விழிப்புணா்வு ஊா்வலத்தை வட்டாட்சியா் சண்முகம் தொடக்கிவைத்தாா்.

மேலும், அலுவலகம் எதிரே வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி நடைபெற்றது. தொடா்ந்து புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முதுநிலை வருவாய் ஆய்வாளா் கலைவாணி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்ட வழங்கல் வட்டாட்சியா் தேவி, வருவாய் ஆய்வாளா் கலையரசன், தலைமையிடத்து வட்டாட்சியா் தெய்வநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு டவுன் துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணை ஆட்சியர் அனாமிகா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். வட்டாட்சியர் சுமதி முன்னிலை வகித்தார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அமெரிக்கன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் , அரசு கல்லூரி மாணவர்கள், என சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.

பேரணியில் அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் , தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 1:49 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...