Begin typing your search above and press return to search.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்
HIGHLIGHTS

நிவாரண உதவிகளை வழங்கும் செய்யாறு எம்எல்ஏ ஜோதி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் அண்மையில் தொடர்ந்து பெய்த மழையினால் வெள்ளநீர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கிருந்த 11 குடும்பத்தினரை உடனடியாக வெளியேறி அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் தங்க வைத்தனர்.
அங்கு வந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் அங்கு தங்கியிருந்த குடும்பங்களுக்கு அரிசி மூட்டை காய்கறி உள்ளடங்கிய தொகுப்பினை வழங்கி மூன்று வேளையும் உணவு வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்திருந்த வெள்ள நீரை வெளியேற்ற பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.