புதிய சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு

ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதிய சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு
X

புதிய சிமெண்ட் சாலை, சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வட தண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கவுன்சிலர் ஞானவேலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி செய்யாற்றை வென்றான் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியானதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளர் கலைமணி குடும்பத்தாருக்கு ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Updated On: 2 July 2022 1:15 PM GMT

Related News