/* */

செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மீட்கப்பட்டது

HIGHLIGHTS

செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த K. என்பவர் கடந்த 26.05.2021 அன்று தனது வீட்டின் அருகே TN-87 0088 என்ற பதிவெண் கொண்ட Hero splender+ இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுவிட்டதாகவும், 28.05.2021 அன்று காலை வெளியூரிலிருந்து வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்றும், மேற்படி வாகனத்தை கண்டுபிடித்து தருமாறும், பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை அடுத்து, பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் கோமளவள்ளி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று 01.08.2021 பெரணமல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சடத்தாங்கல் கூட்ரோட்டில் காவல் ஆய்வாளர் கோமளவள்ளி அவர்களின் தலைமையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த அசோக் என்பவரை மடக்கி விசாரித்த செய்தபோது. அந்நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மேற்படி காணாமல் போன சுரேஷ் என்பவரின் இருசக்கர வாகனம் என்பது தெரிய வரவே, உடனடியாக அசோக்கை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 1 Aug 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?