Begin typing your search above and press return to search.
செய்யாறு அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை செய்த இருவர் கைது
செய்யாறு அருகே, பெட்டிக்கடையில் மது குட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

கைது செய்யப்பட்ட அருள் , ராமன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பல்லி மேட்டு நகர் பகுதியில், பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெட்டிக்கடையில் மது புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. கடையில் மறைத்து வைத்திருந்த 703 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் அருள், அவரது உறவினர் ராமன் ஆகியோரை கைது செய்தனர்.