/* */

செய்யாறு அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

செய்யாறு தூசி கிராமத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
X

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

தூசி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அவரது உறவினர் மோரணம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் வந்து, ஆபாச வீடியோக்களை காட்டி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை பற்றி வெளியே தவறாக சொல்லிவிடுவேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

பால் வியாபாரி கொலை:

ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு . பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா , சிவசங்கர் ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர். பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார். இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர். ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2023 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பர்கூர் அடந்த வனப்பகுதியில் ஆம்புலன்சிலேயே பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி