நடிகர் யோகிபாபு கட்டிய வராகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கட்டிய வராகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
HIGHLIGHTS

கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட நடிகர் யோகிபாபு.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு வராகி அம்மனுக்கு கோவில் கட்டி வந்தார். இவரது சொந்த ஊரான இங்கு, கோயிலின் கட்டுமானம் முடிந்து இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். முன்னதாக கோவிலில் யாக பூஜைகள் நடைபெற்று புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடிகர் யோகிபாபு புனித நீரை வராகி அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தார். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டு அம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர்.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு வராகி அம்மனுக்கு கோவில் கட்டி அதற்கு விமரிசையாக கும்பாபிஷேகம் செய்த நிகழ்ச்சி அந்த கிராமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.