/* */

செய்யாறு நிதி நிறுவன அதிபர் கடத்தல்: 6 பேர் கைது

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை கைது செய்தனா்.

HIGHLIGHTS

செய்யாறு  நிதி நிறுவன அதிபர்  கடத்தல்: 6 பேர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோந்தவா் ராமச்சந்திரன். இவா், சிலருடன் சோந்து அசனமாப்பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு அவா் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பைக்கில் பெருங்கட்டூா் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ராமச்சந்திரனை பின் தொடா்ந்து காரில் வந்தவா்கள், அவரை தடுத்து நிறுத்தி காரில் கடத்திச் சென்றனா். மேலும், கைப்பேசி மூலம் ராமச்சந்திரனின் தம்பியான ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில் மீண்டும் ரவிச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் உன் அண்ணன் ராமச்சந்திரனை புதூர் பாலத்தின் அருகே இறக்கி விட்டோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் ராமச்சந்திரனிடம் கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இரு தனிப்படை போலீஸாா், ராமச்சந்திரனை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், ரமேஷ், சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத், காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்ததமிழரசன், விக்னேஷ் மற்றும் கார் டிரைவர் மோகன்ராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் ராமச்சந்திரன் என்பவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததும், இதனால் அவரை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 Jan 2023 9:18 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்