சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே, சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். நேற்று ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். மகன், மகள் இருவரும் செய்யாறு சிப்காட் காலனி தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.

மாலை நேரத்தில், அஞ்சலையும் பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் திறந்து கிடந்தது.

அதில் வைத்திருந்த 26 பவுன் நகை, ரூ.1¼ லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், வீட்டின் தோட்டத்து பக்கமாக சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தூசி போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 5:53 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...