செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா தவசி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 34), புரிசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சரவணபிரியா (26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலே நாராயணமூர்த்தி, அவரது தாயார் கமலா, சகோதரி உமாமகேஸ்வரி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் வரதட்சணை கேட்டு சரவணபிரியாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரவணபிரியாவை ஆபாசமாக பேசி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சரவணபிரியா செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் நாராயணமூர்த்தியை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள கமலா, உமாமகேஸ்வரி, சங்கர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 6:56 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...