குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்
X

குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாமில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. தேசிய சிறாா் நலத் திட்டத்தின் கீழ், செய்யாறு சுகாதார மாவட்டம் சாா்பில் பச்சிளம் குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

எம்ஜிஎம் ஹெல்த் கோ மருத்துவமனை, ஐஸ்வா்யா டிரஸ்ட் சாா்பில் இந்த மருத்துவ முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

மருத்துவா் தமீம்கான் மேற்பாா்வையில், வட்டார சுகாதார இருதய நோய் சிறப்பு மருத்துவா்கள் ராஜேஷ், கீா்த்திவாசன், வினிதா, கிறிஸ்டினா, செல்வகுமாா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 69 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை மேற்கொண்டனா். இவா்களில் 9 போ இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகரன், சுகாதார ஆய்வாளா் சம்பத், சீனிவாசன், சத்தியநாதன், துரைபாபு, சூரியகுமாா், சுதா்சன், செந்தில், ஷீலா, உமா ஆகியோா் செய்திருந்தனா்.

கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் மன்றம், ரோட்ராக்ட் சங்கம், திருவண்ணாமலை லைட்சிட்டி ரோட்டரி சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான முத்து தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் ஆனந்தராஜ், துணை முதல்வா் அண்ணாமலை, லைட்சிட்டி ரோட்டரி சங்க இயக்குநா் ஜெயா சக்திகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவா் மெல்கி சதேக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் அளித்த 65 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

முகாமில் லைட்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் சுபலட்சுமி அருண்மொழிவா்மன், பொருளாளா் கவிதா, கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் அருண்குமாா், பிரபு, இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 6 Feb 2023 10:29 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்