/* */

ஆடு வாங்க பணத்துடன் சென்ற விவசாயி: பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஆடு வாங்க உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு சென்ற விவசாயியிடம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

HIGHLIGHTS

ஆடு வாங்க பணத்துடன் சென்ற விவசாயி:  பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
X

துணை தாசில்தார் ஸ்ரீதேவி தலைமையில் பறக்கும் படையினர் காஞ்சீபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

செய்யாறில் துணை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் பறக்கும் படையினர் காஞ்சீபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தவசி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் ஆடு வாங்க சிறுவேளியநல்லூர் கிராமத்திற்கு செல்வதாக தெரிவித்தார்.

அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.59 ஆயிரத்து 300 கொண்டு சென்றதால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமனிடம் ஒப்படைத்துள்ளனர்.

போளூர் பேருந்து நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டியன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.50 லட்சம் எடுத்து வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மணி நகை அடகு வைத்து பணம் பெற்றதற்கான ரசீதினை வீட்டுக்கு சென்று எடுத்து வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமனிடம் காண்பித்தார். பின்னர் பறிமுதல் செய்த பணம் மணியிடம் வழங்கப்பட்டது.

Updated On: 30 Jan 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்