டாஸ்மாக் கடையில் தீ விபத்து. ரூ.80 ஆயிரம் மதுபாட்டில்கள் சேதம்

செய்யாறு அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து. ரூ.80 ஆயிரம் மதுபாட்டில்கள் சேதமடைந்தன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டாஸ்மாக் கடையில் தீ விபத்து. ரூ.80 ஆயிரம் மதுபாட்டில்கள் சேதம்
X

டாஸ்மாக் கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மதுபாட்டில்கள் சேதம் அடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே பெருமாந்தாங்கல் கிராமத்தில் வெம்பாக்கம்- ஆற்காடு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துக் கொண்டு ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் எரிந்த நிலையில் இருந்தது. மேலும் கடைக்குள் இருந்து கரும்புகை வெளியே வந்து சுவரில் படிந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களோ என்று சந்தேகம் எழுந்ததால் இதுகுறித்து மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் செய்யாறு டிஎஸ்பி செந்தில் மற்றும் மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கடையை திறந்து, உள்ளே சென்று பார்வையிட்டபோது, மின்கசிவால் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்துள்ளது தெரியவந்தது. இதில் பிரிட்ஜில் இருந்த 160 பீர் பாட்டில்கள் மற்றும் பிரிட்ஜ் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பெட்டி மதுபாட்டில்கள் எரிந்து வெடித்து நாசமாகியுள்ளது தெரிந்தது.

இந்த தீ விபத்தில் பிரிட்ஜ், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்துள்ளது என்பது தெரிய வந்தது. தீ கடை முழுவதும் பரவாததால் கடையில் இருந்த மற்ற மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடையாமல் தப்பியது.

இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jan 2022 7:22 AM GMT

Related News