Begin typing your search above and press return to search.
செய்யாறு அருகே நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்
செய்யாறு அருகே கூட்டுறவு வங்கி சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS

மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் தலைமையில் நடைபெற்ற நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம்.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாங்கால் கூட்ரோடு கிளை சார்பில் எஸ் கே தண்டலம் கிராமத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிளை மேலாளர் பி ஜெயந்தி தலைமை தாங்கினார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் வங்கி மூலம் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளி கடன்கள் கால்நடை பராமரிப்பு மூலதன கடன் விதவைகளுக்கான உதவி கடன் நடமாடும் ஏடிஎம் நடமாடும் வாகனம் மூலம் கணக்கு துவக்குதல் ஆகிய குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு நேரடி கடன் ரூ.3,60000 வழங்கப்பட்டது. இதில் வங்கி உதவியாளர் தீபா காசாளர் சபரிநாதன் கலந்து கொண்டனர்.