நிலத்திற்கு அடங்கல் தர மறுப்பு; விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலர், நிலத்திற்கு அடங்கல் தர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நிலத்திற்கு அடங்கல் தர மறுப்பு; விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). விவசாயி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய கடன் பெறுவதற்காக, குத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் சந்திரனிடம், தனது நிலத்திற்கான அடங்கல் வழங்கும் படி கேட்டுள்ளார். ஆனால், அவர் வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணி, நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக, தனது இறப்புக்கு காரணம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் மற்றும் கண்ணாயிரம் என்பவர்கள் தான் காரணம் என கூறி சட்டைப்பையில் கடிதம் ஒன்றை எழுதிவைத்திருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடங்கல் வழங்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குத்தனூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 31 July 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்