Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தூசி கிராமத்தில் போலி மருத்துவர் சங்கரலிங்கம் கைது செய்யப்பட்டார்.
மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் சங்கரலிங்கம் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சங்கரலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர். கைதான சங்கரலிங்கத்திடம் இருந்து மருத்துவ உபகரணங்கள், ஆங்கில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.