/* */

இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்து நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டது

HIGHLIGHTS

இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய  நீதிமன்றம் உத்தரவு
X

நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு பேருந்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி முருகன் மகன் ராம்குமார் கிராமத்தில் மளிகை கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இவர் கடந்த 14 .1.2016. ஆம் தேதி மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ள வீரம்பாக்கம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராம் குமார் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு குறித்து வந்தவாசி வடக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர் இந்நிலையில் விபத்தில் இறந்த ராம்குமாருக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது தாயார் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி இழப்பீடு தொகையை வழங்கிட தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 20.1.2020 அன்று உத்தரவிட்டிருந்தார்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாகியும் விபத்தில் இறந்தவர்க்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லை என தெரிகிறது , இது குறித்து ராம்குமார் இன் தாயார் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தின் மேல் முறையீடு மனு செய்தார்.இந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமர வர்மன் இழப்பீடு தொகையை அசலும் வட்டியும் ஆக சேர்த்து ரூபாய் 14 லட்சத்தை போக்குவரத்து கழகம் செலுத்த தவறிய காரணத்தால் அரசு பேருந்து ஜப்தி செய்ய 6.7.22 தேதியில் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்திரவின் பேரில் செய்யாறு பேருந்து நிலையத்தில் இன்று காலை தயார் நிலையில் நின்று கொண்டிருந்த செய்யாறு பனிமனையை சேர்ந்த அரசு பேருந்து நீதிமன்ற அமீனா பறிமுதல் செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

Updated On: 22 Aug 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்