Begin typing your search above and press return to search.
செய்யாறு அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
கரும்பு சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேட்டு எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 35). இவருக்கு திருமணமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவிக்கு மயக்க மருந்து கலந்த கரும்புச்சாறை சந்தோஷ்குமார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.
தொடர்ந்து மாணவியை சந்தோஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் கர்ப்பமான மாணவியிடம், சந்தோஷ்குமார் கருவை கலைக்குமாறு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ்குமாரை கைது செய்தார்.