கல்லூரி மாணவர் 'போக்சோ'வில் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லூரி மாணவர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
X

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

'போக்சோ' சட்டத்தில் வாலிபர் கைது

வெம்பாக்கம் தாலுாகா, மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 19). இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பிரசன்னாவுக்கும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ,உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிக்கு வயிற்றுவலி அதிகமாக பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

காவேரியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் அன்புமூர்த்தி. இவரது மகன் அமுதவருஷன் (வயது 14). 10-ம் வகுப்பு மாணவன். நண்பர்களுடன், சமுத்திரம் ஏரி அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கினார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவண்ணாமலை தாலுாகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 28 Nov 2022 2:11 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  2. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  3. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  4. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  5. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  6. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  7. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...
  8. காஞ்சிபுரம்
    இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்
  9. சென்னை
    ஆவின் நிறுவனத்தின் அலட்சியம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
  10. ஆன்மீகம்
    manthralayam ragavendra temple history in tamil தெய்வீக அருளின் புனித...