/* */

செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

செய்யாறில் பைனான்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செய்யாறில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
X

 சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

செய்யாறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கொடநகர் அறிஞர் அண்ணா பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்கிற மணி (வயது 26), பைனான்சியர். இவரது மனைவி ரூபிணி (25). இவர்களுக்கு ஒரு வயதில் கீர்த்தி என்ற ஆண் குழந்தை உள்ளது.

திருநாவுக்கரசு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

அதில், செய்யாறு தாலுகா பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மகன் அன்பு பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனத்தில் இருந்து அன்பு விலகிக் கொண்டதால் அவரது பங்குத்தொகையை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நிதி நிறுவனத்திற்கு சென்ற அன்பு, அவரது தம்பி நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் திருநாவுக்கரசியிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நிதி நிறுவனத்தையும் பூட்டிவிட்டு சென்றனர்.

மறுநாள் 28-ந்தேதி காலையில் திருநாவுக்கரசிடம், அன்பு மற்றும் அவரது தம்பி நடேசன் ஆகியோர் பணத்தை கொடுத்துவிட்டு நிதி நிறுவன கடையின் சாவியை வாங்கிக்கொள் என்று கூறியுள்ளனர். மேலும் அவரை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநாவுக்கரசு 29-ந் தேதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி ரூபினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செய்யாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் திருநாவுக்கரசின் தற்கொலைக்கு காரணமான அன்பு, அவரது தம்பி நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேரை கைது செய்யக்கோரி திருநாவுக்கரசின் மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அண்ணா சிலை அருகில் திடீரென நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 31 March 2023 1:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  2. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  6. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  7. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  8. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  9. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  10. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!