கல்லூரி மாணவியின் கழுத்தை நெறித்த காதலன்: கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் ஆத்திரம்

செய்யாறு அருகே கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்லூரி மாணவியின் கழுத்தை நெறித்த காதலன்: கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் ஆத்திரம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் ராஜவேலு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கர்ப்பமான மாணவி ராஜவேலுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து ராஜவேலு கரு கலைப்பதற்காக மாத்திரை வாங்கிக் கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டும் கருக்கலையவில்லை என்ற கூறப்படுகிறது.

இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார். மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து ராஜவேலுவை தேடி வருகிறார்.

Updated On: 22 April 2023 11:20 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
 2. சினிமா
  லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
 3. உலகம்
  அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
 4. தமிழ்நாடு
  பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
 5. சிவகாசி
  சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
 6. மொடக்குறிச்சி
  ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
 7. இந்தியா
  தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
 8. இராஜபாளையம்
  திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
 9. திருப்பூர்
  ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
 10. தமிழ்நாடு
  புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...