Begin typing your search above and press return to search.
செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரத்த தான முகாம்
செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் 90 பேர் ரத்த தானம் செய்தனர்
HIGHLIGHTS

செய்யாறில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த ரத்த தான முகாம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் அமைப்பு தின ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ச.சாரி, முன்னாள் பொதுச் செயலாளர் ந.சேகர், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.பிரபு வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் முகாமினை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி குழுவின் தலைவர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 90 நபர்களிடம் இருந்து இரத்தம் தானமாகப் பெற்று சென்றனர்.