Begin typing your search above and press return to search.
தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 903 பேர் விண்ணப்பம்
மருத்துவத்துறையில் ஐந்து பிரிவுகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்ற 903 பேர் விண்ணப்பம்
HIGHLIGHTS

தமிழகத்தில் வேலைவாய்ப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர், நுண் கதிர் இயக்க நுட்புனர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், என 5 பிரிவுகளின் கீழ் கடந்த இரண்டு நாட்களாக தேர்வு நடைபெற்றது.
இதில் செய்யாறு சுகாதார துணை இயக்குனரக அலுவலகத்தில் இந்த ஐந்து காலி பணியிடங்களுக்கு மொத்தம் 903 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணைக்கு பிறகு தகுதியான நபர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்படுவார்கள் என செய்யாறு சுகாதார துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.