/* */

செய்யாறு அரசு கல்லூரியில் ஆண்டு விழா

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஆண்டு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

செய்யாறு அரசு கல்லூரியில் ஆண்டு விழா
X

ஜோதி,  எம் எல் ஏ  மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் உமா வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், மணி, கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிய செயலாளர் ஞானவேல் தினகரன் பார்த்திபன் சுந்தரேசன் ராம் ரவி , வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு

அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் அனாமிகா பரிசு வழங்கினாா்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தேசியத் திட்டத்தின் கீழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப் பெற்ற மூன்று மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா செய்யாறு வட்டார வள மையத்தில் நடைபெற்றது. விழாவில் செய்யாறு சாா் ஆட்சியா் அனாமிகா பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில், வட்டார வள மைய அலுவலா்கள் புருஷோத்தமன், சத்தியராஜ், கமலகண்ணன், குணசேகரன், செய்யாறு வட்டார வளமைய பூச்செண்டு ஆகியோா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு

செய்யாறை அடுத்த எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடையாக வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்தில் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ஆம் வகுப்பு படித்து முடித்து உயா்நிலை கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பெருமாள் வருடந்தோறும் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை நன்கொடைபாக வழங்கி வருகிறாா்.

நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் தலைமை வகித்தாா்.

தலைமை ஆசிரியா் பெருமாள் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி பங்கேற்று, மிதி வண்டிகளை பள்ளி மாணவா்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா். அப்போது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை நிதியாண்டில் புதிய கட்டடத்தை கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

Updated On: 29 April 2023 10:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...