/* */

சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த  எதிர்ப்பு; அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு, மேல்மா பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு பகுதியை சேர்ந்த செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 3300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை சிப்காட் தொழிற் பூங்கா விரிவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இந்த செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக உள்ளது.

இவ்வாறு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள திமுக அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் மேல்மா கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி மோகன் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் சுப்பிரமணியன், சேவூா் ராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடா்பாளா் பாபு முருகவேல் ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் விமலா மகேந்திரன், லதா குமாா், ஜாகீா் உசேன், மணி, பாஸ்கா், ரவிச்சந்திரன், அருணகிரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், குணசீலன், ஒன்றியச் செயலா்கள் மகேந்திரன், திருமூலன், துரை, நகரச் செயலா் வெங்கடேசன், அதிமுக தொண்டர்கள், மேல்மா போராட்ட விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Oct 2023 2:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்