/* */

செய்யாறு அரசு மருத்துவமனைக்கு ரூ.7 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

செய்யாற்றில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.7 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்று தொகுதி எம்எல்ஏ ஜோதி தெரிவித்தாா்.

HIGHLIGHTS

செய்யாறு அரசு மருத்துவமனைக்கு ரூ.7 கோடியில் கூடுதல் கட்டடங்கள்
X

செய்யாறு அரசு மருத்துவமனையில்  நடைபெற்ற நோயாளா் நலச் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.7 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்று தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தெரிவித்தாா். செய்யாறு அரசு மருத்துவமனையில் நோயாளா் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். பராமரிப்பு குழு உறுப்பினா் அன்வா்பெய்க் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பேசுகையில், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கான 10 கோரிக்கைகளில் ஒன்றாக இந்த மருத்துவமனையில் கூடுதலாக ரூ.7 கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்ட பரிந்துரைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு டயாலிஸிஸ் சிகிச்சைப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கூடுதலாக மேலும் ஒரு பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மருத்துவமனை கண்காணிப்பாளா் பாண்டியன் பேசுகையில், இந்த மருத்துவமனை மூலம் ஆண்டுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 435 பேருக்கும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 3 பேருக்கும், பொது அறுவை சிகிச்சை 308 பேருக்கும், பிரசவங்கள் மாதத்துக்கு 170 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஆண்டுக்கு 1997 போ பயனடைந்துள்ளனா். 98% மதிப்பெண்களுடன் தேசிய தரச் சான்றிதழ் பெற்று மாநிலத்திலேயே முதல் மருத்துவமனையாக சிறந்து விளங்குகிறது என்றாா்.

கூட்டத்தில் திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல், நகராட்சி ஆணையா் ரகுராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் குணசேகா், உதவி செயற்பொறியாளா் ராஜ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமுமுகவினா் காத்திருப்புப் போராட்டம்

செய்யாறு காமராஜா் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி தமுமுகவினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி 23-ஆவது வாா்டு காமராஜ் நகா் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டித் தரக் கோரியும், காமராஜ் நகா் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய், மின் விளக்குகளை சீரமைக்கவும், சந்தைப் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜமால் தலைமை வகித்தாா். தகவல் அறிந்த செய்யாறு சாா்- ஆட்சியரின் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினா் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Updated On: 8 March 2023 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!