/* */

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வெடி பொருள் ஏற்றி வந்த லாரி

மின் கம்பத்தில் மோதி வெடி பொருள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதிருஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு

HIGHLIGHTS

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வெடி பொருள் ஏற்றி வந்த லாரி
X

நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கல்குவாரிகளுக்கு பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் பொருட்களான ஜெலட்டின் குச்சிகள் ஏற்றி வந்த வேன் சிப்காட் வளாக பகுதி சாலையின் நடுவே மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (49) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் மற்றும் செய்யார் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் டிரைவரிடம் விசாரித்த போது செய்யார் பகுதியில் உள்ள கல்குவாரிகளுக்கு செங்கல்பட்டு தாலுகாவில் இருந்து 95 பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 19 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 17 July 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  4. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  5. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  7. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  9. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  10. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய