Begin typing your search above and press return to search.
ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.6.10 லட்சம்
ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 6.10 லட்சத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
HIGHLIGHTS

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம் .
இந்நிலையில் கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.
அதன் பிறகு இன்று கோயிலில் உள்ள 14 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் 6.10 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
செய்யாறு சரக ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவக்குமார், கணக்காளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் திருக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.