திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவத்திபுரம் நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி, சுயேச்சையாக தாய் தந்தை மகன் போட்டி.
HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, மற்றும் சுயேச்சைகள் என ஐந்து தம்பதிகள் போட்டியிடுகின்றனர்.
திமுகவில் நகர செயலாளர் மோகனவேல் 18வது வார்டிலும், அவரது மனைவி பேபி 13ஆவது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவில் ராஜேஷ்குமார் 14வது வார்டிலும் அவரது மனைவி வளர்மதி 13 வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
பாமகவில் 12 வது வார்டில் சீனிவாசனும் அவரது மனைவி பத்மபிரியா 20ஆவது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவில் 11 வது வார்டில் சந்திரசேகரனும் அவரது மனைவி விமலாதேவி 1 வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சை வேட்பாளரான ராஜேந்திரன் 18வது வார்டில் அவரது மனைவி மலர் 20ஆவது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
குடும்பமே போட்டி
செய்யாறு வைத்தியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் 18வது வார்டிலும், அவரது மனைவி 20ஆவது வார்டிலும் அவரது மகன் ராம்கி 16வது வார்டிலும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றனர். மூவருக்கும் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.