/* */

தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்

Chennai Beach To Tiruvannamalai Special Train-கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தீப திருவிழா:  திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்
X

பைல் படம்.

Chennai Beach To Tiruvannamalai Special Train-திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: , திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் வண்டி எண் 06033/06033 தற்போது திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிசம்பர் 5 ம் தேதி (நாளை) முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படும்.

மறுமார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிசம்பர் 6 ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 09.05 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும்.

அதே போல் வண்டி எண் 06115/06116 தாம்பரம் -திருவண்ணாமலை -தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 4:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!