செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

செங்கத்தில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 30 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
X

செங்கத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்கத்தில் மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 30 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி செங்கம், துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவில் தெரு, இராஜ வீதி, சிவன்கோவில் தெரு, தளவாநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

போளூா் சாலையில் புறப்பட்ட ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா். பா.ஜ.க. பேரூராட்சிமன்ற உறுப்பினா் முரளிதரன், இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன், பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பொறுப்பாளா் மகேஷ் கலந்து கொண்டு ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

ஊா்வலம் போளூா் சாலையில் புறப்பட்டு மசூதி வழியாகச் சென்று பழைய போலீஸ் லைன் தெரு வழியாக சென்று பின்னா் ஆங்காங்கே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊா்வலத்தின் போது மசூதி முன் கற்பூரம் ஏற்றாமல் ஊா்வலம் செல்லவேண்டுமென போலீஸாா் தெரிவித்ததால், போலீஸாருக்கும் விழாக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் அனைவரையும் சமாதானம் செய்தாா். பின்னர் ஊர்வலம் அமைதியாக சென்றது.

ஆரணி

ஆரணி நகரம், ஒன்றியங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தினா். ஆரணி நகரத்தில் பெரிய கடை வீதி, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம், பள்ளிக் கூடத் தெரு, சைதாப்பேட்டை என 49 இடங்களில் இந்து முன்னணி மற்றும் தெரு மக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினா்.

மேலும், சேவூா், எஸ்.வி.நகரம், பையூா், வடுகசாத்து, குண்ணத்தூா், இரும்பேடு என பல்வேறு கிராமங்களில் சுமாா் 55 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

காந்தி ரோட்டில் சந்திரகுளம் பகுதியில் சந்திரகுள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம் நடைபெற்றது. ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கில்லா சுந்தர விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் விநாயகரை புஷ்பல்லக்கில் அலங்கரித்து திருவீதி உலா நடைபெற்றது.

வந்தவாசி

வந்தவாசி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. மேலும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வந்தவாசி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வந்தவாசி தெற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ரோந்து பணியிலும், ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Updated On: 19 Sep 2023 1:48 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல், தேடுதல்...
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 3. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 4. திருவில்லிபுத்தூர்
  கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்
 5. இந்தியா
  ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
 6. பொன்னேரி
  அரிமா சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 8. திருவள்ளூர்
  கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...
 9. சினிமா
  விக்ரம், சூர்யா பட பிரபலம் மரணம்...திரையுலகம் அஞ்சலி..!
 10. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்