/* */

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.40 லட்சம் திருட்டு

செங்கம் நகரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை இருசக்கர வாகனத்தில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.40 லட்சம் திருட்டு
X

பைல் படம்.

செங்கம் நகரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை இருசக்கர வாகனத்தில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கம் அருகே மேல்வணக்கம்பாடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம் , சம்பத் . இந்த நிலையில் இன்று சிவலிங்கம் செங்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.30 ஆயிரமும், சம்பத் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் எடுத்தனர்.

பின்னர் அவர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் பணத்தை வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது பெங்களூரு நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு இருவரும் வேறு பணிக்கு சென்றுள்ளனர்.

மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்களில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து செங்கம் போலீஸ் நிலையத்தில் இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மகாத்மா காந்தி உருவச்சிலை சேதம்

செங்கம் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இன்று அதிகாலை இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சேதம் அடைந்த மகாத்மா காந்தி உருவச் சிலை சீரமைக்கும் பணியை டிஎஸ்பி சின்ராஜ் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இரவு நேரங்களில் யாரும் உள்ளே நுழையாமல் பாதுகாப்பை உறுதி செய்திடவும், இரவு நேரங்களில் பள்ளி வளாகம் முழுவதும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jun 2023 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...