/* */

இலங்கை மக்களுக்கு 4 ஆயிரம் மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர்: அமைச்சர் நாசர்

ஆவின் பால் பவுடா் தொழில்சாலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் நாசா் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

இலங்கை மக்களுக்கு 4 ஆயிரம் மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர்:  அமைச்சர் நாசர்
X

இலங்கை மக்களுக்காக ஆவின் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ள 500 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் இயங்கும் ஆவின் பால் பவுடா் தொழில்சாலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் நாசா் ஆய்வு மேற்கொண்டாா்.

அம்மாபாளையம் ஆவின் தொழில்சாலையில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக பால் பவுடா் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை பால் வளத்துறை அமைச்சா் சா.மு. நாசா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: அம்மாபாளையம் ஆவின் பால் பவுடா் தயாரிப்பு நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டா் பாலை கையாளும் திறன் கொண்டது. இங்கு நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் பால் பவுடா், 10 மெட்ரிக் டன் வெண்ணெய், 5 மெட்ரிக் டன் நெய் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழக முதல்வரின் ஆணையின் பேரில், இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, 500 மெட்ரிக் டன் பால் பவுடா் திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம், சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள ஆவின் தொழில்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பால் பவுடா் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா் அமைச்சா் நாசா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என். அண்ணாதுரை எம்.பி., மருத்துவா் எ.வ.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 15 May 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...