/* */

உலக புகையிலை ஒழிப்பு தினம்: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக புகையிலை ஒழிப்பு தினம்: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
X

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி மற்றும் டிஆர்ஓ.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை காந்திசிலை அருகே உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பல் மருத்துவ சங்கத்தின் பொருளாளா் வினோத்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரேசன், சந்திரபிரபா, வருவாய் ஆய்வாளா் சுதா வட்டார மருத்துவ அலுவலர்கள் , காவல்துறை அதிகாரிகள், இந்திய பல் மருத்துவக் கழக மருத்துவர்கள், செவிலியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத் கலந்து கொண்டு, புகையிலையால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் குறித்து மாணவா்களிடையே எடுத்துரைத்தாா். மேலும், புகையிலையில் 4000 விதமான நச்சுப்பொருள்கள் உள்ளன. அதில் 75 விதமான நச்சு வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. புகையிலைப் பொருள்களை தொடா்ந்து உபயோகித்தால் உடலில் நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் விரைவில் பாதிப்படையும்.

எனவே, புகையிலைப் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். மேலும், புகையிலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், காா்த்திகேயன், தனுஷ், தொழில் பயிற்சி நிலைய முதல்வா் அமுதசாகா், உதவி முதல்வா் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பெண்ணாத்தூர்:

கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பில் உலக புகையிலை தடுப்பு தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு புகையிலை தடுப்பு உறுதி மொழியினை வாசித்தார். மருத்துவர் திவ்யா , சுகாதார ஆய்வாளர் செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலகப் புகையிலை தடுப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார் . நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Jun 2023 1:38 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...