/* */

வாலிபரை பஸ்சிலிருந்து கீழே தள்ளிய கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

குடிபோதையில் இருந்த பயணியை, கீழே தள்ளிய கண்டக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வாலிபரை பஸ்சிலிருந்து கீழே தள்ளிய கண்டக்டர் சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்டக்டர் மற்றும் போதையில் இருந்த வாலிபர்.

திருவண்ணாமலை க்ரைம் செய்திகள்

பயணியை தள்ளிவிட்ட பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்'

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி - செய்யாறு சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பிரகாஷ் என்பவர், தடம் எண் 477 பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார். இந்த பஸ், வந்தவாசியில் இருந்து திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படுகிறது. நேற்று இந்த பஸ், பெங்களூருவில் இருந்து வந்தவாசி திரும்பியபோது ஒரு பயணி மது போதையில் இருந்துள்ளார்.

அந்த நபர் பஸ்சில் இருந்து தள்ளாடியபடி இறங்கியுள்ளார். அப்போது பின்னால் இருந்து தண்ணீரை ஊற்றிய பிரகாஷ், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து அவரை கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி, மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து கண்டக்டரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் ஜோசப், கண்டக்டர் பிரகாஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

செல்போன் கடையில் தகராறு செய்த போதை வாலிபர்

திருவண்ணாமலைபுது வானியங்குள தெருவை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று கஞ்சா போதையில், மக்கள் அதிக அளவில் நடமாடும் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் செல்போன் வாங்குவது போல கடைக்காரரிடம், ஒரு செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, திடீரென அந்த செல்போனை கீழே போட்டு உடைத்ததுடன் தொடர்ந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் செல்போன் கடைக்காரரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன் கடைக்காரர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போதையில் இருந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு வியாபாரிகள் தகவல் அளித்தனர்.அங்கு சென்ற காவல்துறையினர், கஞ்சா போதையில் இருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மூதாட்டியிடம் பவுன் செயின் பறிப்பு

ஆரணி அடுத்த கொசப்பாளையத்தில் ஈஸ்வரி (வயது 60). நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு ஈஸ்வரி ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் செல்லும்போது இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் முன்பாக சென்று பின்னர் அவருக்கு எதிரே வந்து ஈஸ்வரியின் கழுத்தில் அணிந்து இருந்த 21 பவுன் செயினை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் ஈஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புகழ், சப்-இன்ஸ் பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் உள்பட போலீசார் விரைந்து வந்து இரவு முழுவதும் மர்ம நபர்களை தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2022 2:02 AM GMT

Related News