/* */

குறுந்தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்: வகுப்பறைக்குள் அனுமதி மறுத்த ஆசிரியர்கள்

அரசு பள்ளியில் குறுந்தாடியுடன் வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்க மறுப்பு, மாணவர்களை ஒழுக்கத்துடன் வர செய்த இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு

HIGHLIGHTS

குறுந்தாடியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்: வகுப்பறைக்குள் அனுமதி மறுத்த ஆசிரியர்கள்
X

சேவிங் ரேசரை கொண்டு ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொண்ட மாணவர்கள்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்கான ஒரு இடம் என்றால் அது பள்ளி தான். பள்ளி பருவம்தான் ஒருவரின் வாழ்க்கையை எதிர்காலத்தில் மேம்படுத்தும். என்னதான் உயர்கல்வி படித்தாலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களை நல்வழிப்படுத்தும். எனவே பள்ளிகளில் கல்விக்கு இணையாக ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது தினமும் சீருடையை சுத்தமாக அணிந்து கொண்டு தலையில் எண்ணெய் வைத்து வர வேண்டும். மேலும், கை-கால் நகங்களை வெட்டி இருப்பதுடன் தலைமுடியையும் முறையாக வெட்ட வேண்டும். புள்ளிங்கோ கட்டிங் மற்றும் ஸ்டைலாக குறுந்தாடி வைக்க கூடாது என்பது உள்ளிட்ட சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சிலர் குறுந்தாடியுடன் முகச்சவரம் செய்யாமல் 'ஸ்டைல்' என்ற பெயரில் வந்துள்ளனர். இதனை கவனித்த ஆசிரியர்கள் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கி உடனடியாக முகச்சவரம் செய்து வர வேண்டும் என வெளியே அனுப்பினர்.

அதற்கு அவர்கள் முடித்திருத்த நிலையங்களில் ஒருவருக்கு முகச்சவரம் செய்ய ரூபாய் 50 கேட்டதால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு ரூபாய் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளனர். இதனால் யோசித்த சில மாணவர்கள் கடைகளில் விற்கப்படும் 'ரேசர் ஷேவ்' 10 ரூபாய் கொடுத்து வாங்கினர். பின்னர் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழாயில் தண்ணீரை பிடித்து முகத்துக்கு தண்ணீர் தடவி ஒருவருக்கொருவர் முகச்சவரம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர்.

இதனை அங்கிருந்த பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பள்ளியையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2023 1:35 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?