/* */

ஆறாக மாறிப்போன விளைநிலம்: விவசாயிகள் வேதனை

சேத்துப்பட்டு அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக விளைநிலம் ஆறு மட்டத்துக்கு சமமாகி பரந்து விரிந்து காணப்படுகிறது

HIGHLIGHTS

ஆறாக மாறிப்போன விளைநிலம்: விவசாயிகள் வேதனை
X

உடைப்பு ஏற்பட்ட ஆற்றுப் பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட ஓதலவாடி கிராமப்பகுதியில் பலத்த மழை காரணமாக புதியதாக அமைக்கப்பட்ட பாலத்தில்5 அடி உயரத்திற்குத் தண்ணீர் சென்றது . இதனால் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது . தற்போது வெள்ளத்தின் அளவு குறைய குறைய பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்த பின்னர்தான் 5 ஏக்கர் விவசாய நிலம் அடித்து சென்றதும் மக்களுக்கு தெரியவந்தது. தற்போது அங்கு நிலமே இல்லாத அளவுக்கு ஆறு மட்டத்துக்கு சமமாகி ஆறு போல் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆதிதிராவிட நல அலுவலர் பார்த்திபன் ,வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோரை சந்தித்து விவசாய நிலத்தை காணவில்லை என மனு கொடுத்தனர். அப்போதுதான் இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது.

உடனடியாக ஆதி திராவிடர் நல அலுவலர் , வட்டாட்சியர் , வருவாய் துறையினர், வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட ஆற்றுப் பாலத்தை சென்று பார்வையிட்டு உடனடியாக சரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 5:16 AM GMT

Related News