இன்ஸ்டாகிராமில் 'மலர்ந்து', ரயில் தண்டவாளத்தில் 'மடிந்த' காதல்

Love Story Instagram- ஆரணி அருகே விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து, இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இன்ஸ்டாகிராமில் மலர்ந்து, ரயில் தண்டவாளத்தில் மடிந்த காதல்
X

ஓடும் ரயில் முன் பாய்ந்து, காதலர்கள் தற்கொலை ( மாதிரி படம்)

Love Story Instagram- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவரின் 17 வயது மகள். இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

ஆரணி அருகே களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர், இவர் போளூர் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐ பயிற்சி பள்ளியில் படித்து வந்துள்ளார்.

ஐடிஐ மாணவனுக்கும், மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரின் காதல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த காதல் ஜோடி இருவரும் தற்கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் இருவரும் ஒன்றாக இணைந்து ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள பால்வார்த்துவென்றான் கிராமம் அருகே விழுப்புரம் காட்பாடி ரயில்வே டிராக்கில் ஒன்றாக கைகோர்த்து நடந்து சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு, இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2023-01-25T12:49:22+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...