/* */

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்

திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் இயக்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்

HIGHLIGHTS

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்
X

திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் இயக்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அங்கன்வாடி மையத்தில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் விமல்ராஜ் தலையில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தையும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில், அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 38 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில், சாந்தி என்ற ஆசிரியரும், சமையல் உதவியாளராக அம்முலு என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உணவு வேளையின்போது குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்ற நிலையில், அங்கன்வாடி மையத்திற்குள் விமல்ராஜ் மற்றும் தீனா ஆகிய 2 குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்பொழுது திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில். இதில் அங்கன்வாடியில் படுத்திருந்த விமல்ராஜூக்கு தாடை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் தீனாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 குழந்தைகளை மீட்டு அருகே உள்ள பூனிமாங்காடு அரசு மருத்துவமனையில் , முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்பு சிறுவர்களின் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் பழுதடைந்த இதுபோன்று அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பள்ளி கட்டிடங்கள் அங்கங்கே கண்டுபிடித்து விபத்துக்கள் ஏற்படும் முன்பே அவற்றை அகற்றி புதிய கட்டிடங்களை கட்டினால் இதுபோன்று நிகழ்வுகள் தொடராமல் இருக்குமென பலரும் கருத்து தெரிவித்தனர்

Updated On: 2 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்