/* */

புதிய நியாய விலை கட்டடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை.

பழுதடைந்த நியாய விலை கடையை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர அழிஞ்சிவாக்கம் கிராம மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

புதிய நியாய விலை கட்டடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை.
X

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் நியாய விலைக்கடை

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில். ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி மையம், இ சேவை மையம், கிளை நூலகம், நியாய விலை கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து இப்பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் நியாய விலை செயல்பட்டு வந்து. இந்தக் கட்டிடம் கட்டி 21 ஆண்டுகள் ஆனதால், தற்போது கட்டடத்தின் உள் மேல் தள சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து கட்டிடத்தில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் கட்டிடத்திற்குள் கசிவதால் கடையில் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, என்னை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்த கட்டடத்தை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் தற்போது இந்த நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த நியாய விலை கடை அமைந்துள்ள இடத்தில் பள்ளி, அங்கன்வாடி, கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் பள்ளி மாணவி, மாணவர்கள். நடமாட்டம் அதிகமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இப்பகுதியில் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள். இந்த பழுதடைந்த நியாய விலை கடை எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே இந்தக் கட்டிடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டிதர இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலமுறை ஊராட்சி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் மனு அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்கள் நலனை கருதி இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தரப்படுமா?.

Updated On: 2 Jun 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  2. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  6. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  7. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  8. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  9. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  10. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...