/* */

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற(22-3-2023) அன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் காலை 11:00 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருப்பொளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விவாதித்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் (வி.பி..டிபி), தூய்மை பாரத் இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படஉள்ளது.

அவரவர்களின் ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் கிராம பொதுமக்களும் மற்றும் 18 வயதிற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் கலந்து கொள்ளவும், கிராம விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளவும், கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் உரிய கொரோனா அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ், வெளியிட்ட செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்திருந்தார்.

Updated On: 20 March 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்