/* */

திருவள்ளூரில் ஒரே நாளில் 887 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில்  ஒரே நாளில் 887 பேருக்கு கொரோனா, 18 பேர் பலி
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விட குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 887 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1705 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 18 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8691 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,475ஆகவும், இதில் 90,421 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1363 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 31 May 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்