/* */

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
X
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.மாவட்டச்செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் மாவட்ட கழகச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தா.மோதிலால், டி.எம்.சுகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

தி மு க . இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் நமது மாவட்டத்தில் தமிழகமேவியக்கும் வண்ணம் மிக சிறப்பாக கொண்டாடப்படவேண்டும். விழாவினை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர்களிலும் ரத்ததானம் முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் இளைஞர் அணியினர் ஆர்வமுடன் வந்து ரத்ததானம் செய்யவேண்டும். இந்த ரத்த தானம் பற்றி முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் அளிக்கும் ரத்தம் தேவையானர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு இருக்கிறோம். மரக்கன்று நடும் இடங்கள் முன்கூட்டியே அடையாளம் காணப்படவேண்டும். மாவட்டம் முழுவதும் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறோம். இல்லந்தோறும் சென்று இளைஞரணியில் 30 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக தி மு. க. வில்சேர்ப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில அணிகளின் நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், சி.ஜெயபாரதி, எம்.மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.ஆதாம்,சிட்டிபாபு, மு.சுப்பிரமணியம், இராஜேஸ்வரி ரவீந்திரநாத், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், தா.கிருஷ்டி, கே.அரிகிருஷ்ணன், ஆர்த்தி கே.ரவி, ரவீந்திரா, சி.ஜெ.சீனிவாசன், சண்முகம், பழனி, கிருஷ்ணன், ஜோதிகுமார், டி.ஆர்.பாபு , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் டி.கே.பாபு, பிரியா , கோவிந்தம்மாள்,கமலக்கண்ணன், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் பவளவண்ணன் நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட தி.மு.கழக செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ .தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை விளக்கும் வகையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Updated On: 12 Nov 2022 6:39 AM GMT

Related News