/* */

திருவள்ளூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை: மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் \ தலைமை ஆசிரியர் இடமாற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை: மாணவர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாமண்டூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாமண்டூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 65 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 4.பேர் மட்டும் உள்ளனர். இங்கு ஆங்கிலம், அறிவியல், உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறியது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, முன்னுக்கு முரணாக பதில் அளித்து மாணவர்கள் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சரியான முறையில் முறையில் இல்லையென்று கழிவறை சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுவதாகவும், குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கூறுகையில், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாலும் அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லாத காரணத்தினாலும், இது குறித்து பலமுறை தலைமை ஆசிரியரிடம் எடுத்துக்கூறியும் எவ்வித பதில் அளிப்பதில்லை என்றும் உடனடியாக தலைமை ஆசிரியரும் மாற்ற வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் உடனடியாக இது குறித்து மேலிடத்தில் எடுத்துக் கூறி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கை விட்டு கலந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Updated On: 1 July 2022 2:15 AM GMT

Related News