Begin typing your search above and press return to search.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூரில் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS

பைல் படம்.
திருவள்ளூர் பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவள்ளூர் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் திடீர் சோதனையிட்டனர். அப்போது நடைமேடை அருகே சுமார் 18-க்கும் மேற்பட்ட மூட்டைகள் அங்கு கிடந்தது. அதனை சோதனையிட்டதில் அதில் சுமார் 450 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் வந்ததை கண்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தன.