/* */

மதுபான ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து மஞ்சள் பை வழங்கல்

மதுபான ஆலை வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து குறுங்காடுகள் உருவாக்குவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுபான ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து மஞ்சள் பை வழங்கல்
X

திருவள்ளூர் அருகே மதுபான ஆலையின் வளாகத்தில் 3500 மரக்கன்றுகள் நட்டு வைத்து. நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத்தை பயன்படுத்துவது குறித்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி ஊக்குவித்த

திருவள்ளூர் அருகே மதுபான ஆலையின் வளாகத்தில் 3500 மரக்கன்றுகள் நட்டு வைத்து. நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத்தை பயன்படுத்துவது குறித்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி ஊக்குவித்தனர்.

திருவள்ளூர் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் மூலம், திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் மதுபான ஆலையின் வளாகத்தில் முதல் கட்டமாக 3500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு வைத்துார். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இங்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து குறுங்காடுகள் உருவாக்குவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சென்னை மண்டல இணை தலைமை சுற்றுச் சூழல் பொறியாளர் த.வாசுதேவன், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சாலை வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 3500 மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்கும் திட்டதை மரக்கன்று நடவு செய்து தொடக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத் தை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் த.மணிமேகலை, உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார் மற்றும் சு.சபரிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.




Updated On: 27 Jun 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!