/* */

தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக்கேடு: கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டு..!

தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக்கேடு: கிராம மக்கள் கடும் குற்றச்சாட்டு..!
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கொசுக்கடி, உடல்அரிப்பு, துர்நாற்றம் போன்ற சுகாதாரக்கேடு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து உடனடியாக தொழிற்சாலையில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், சாணாபுத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொண்டமநல்லூர் கிராம பொதுமக்கள் சார்பில் ஆனந்தன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேரில் அளித்த மனு அளித்தார்.

அம்மனுவில், இக்கிராமத்தில் இறால் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பூமிக்குள் இறங்கி, எங்கள் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் கலந்து வருவதால், நீரின் தன்மையும், சுவையும் மாறுகின்றன. எனவே இத்தொழிற்சாலையால் எங்கள் கிராமத்தின் ஆரோக்கியமான வாழ்க்கையை இழந்து தவிக்கிறோம். இரவு நேரங்களில் கொசுத் தொல்லையும் உள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலைக்காக நாள்தோறும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலம் உறிஞ்சி பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில், அதற்கு மாறாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் லிட்டம் தண்ணீர் எடுப்பதாகவும் இந்த நிறுவனத்தில் இரண்டு ஷிப்டுகளில் அதிகமான அளவில் நீரை வீணாக்கி வருவதால் எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. எனவே இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை, அரசு விதிமுறைப்படி இயங்குகிறதா? என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 8 July 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!